மனித வாழ்க்கையில் பயணம் தவிர்க்க முடியாதது. உள்ளங் கைக்குள் உலகை
சுருக்கும் முன்பே யாதும் ஊரே என உலகுக்கு உரத்த குரலில் உரைத்தவன் தமிழன்.
ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கடல் கடந்து பயணம் செய்து அந்த
அனுபவங்களை பதிவு செய்த வரலாறும் உண்டு.
ஒவ்வொருவரின் அனுபவமும் வெவ்வேறு. ஓரிரு நாட்களின் பயண அனுபவமே பல நூறு கதைகளை நமக்கு சொல்லும். ஐந்தாண்டு வாழ்க்கை அனுபவம் என்றால்...?
நீரில் போடும் கோலம் போன்றது மனித வாழ்க்கை என்பது ராமாயணத்தில் கும்பகர்ணன் வழியாக கம்பர் கூறும் வார்த்தைகள். அதுபோன்ற இந்த நாடோடி வாழ்க்கையில் எனக்கு கிடைத்த பரவச அனுபவம் புதுச்சேரி வாழ்க்கை.
மனதில் தோன்றுவதை எழுதிச் செல்லும் இந்த வழிப்போக்கன் மனதுக்குள் புதுச்சேரி அனுபவங்களையும் எழுதும் எண்ணம் துளிர் விடுகிறது. ஈராயிரம் ஆண்டு பழமையான புதுச்சேரி பற்றி எழுதிய கரங்களால் சமகால புதுவை குறித்து குறிப்புகளை எழுத விழைகிறேன்.
அனந்த ரங்க பிள்ளையின் நாட்குறிப்பாக இல்லாவிட்டாலும் எனக்குள் ஆனந்தம் தருவதாக இருக்கும் என நம்புகிறேன். உங்களுக்கும் கூட....
(அனுபவம் இனிக்கும்...)

No comments:
Post a Comment