= வை.ரவீந்திரன்
தமிழகத்தில் கருணாநிதி தலைமையில் திமுக ஆட்சி மீண்டும்
அமர்ந்த பிறகு, 1989 தேர்தல் தோல்வி குறித்து அதிமுகவின் இரண்டு அணிகளும் ஆராயத்
தொடங்கின. அப்போது தான், ‘வாக்கு வங்கி’ முதன் முதலில் ஆய்வு செய்யப்பட்டது. அந்த தேர்தலில்
திமுக பெற்ற வாக்குகள் 33 சதவீதம். பெரும்பாலான தொகுதிகளில் 2ம் இடத்தை பிடித்த
ஜெ.அணி பெற்ற வாக்குகள் 22 சதவீதம், ஜா. கூட்டணி பெற்றது 12 சதவீத வாக்குகள். இது
தவிர, 19 சதவீத வாக்குகளை காங்கிரஸ் பெற்றிருந்தது.
அதற்கு முந்தைய 1984ம் ஆண்டு தேர்தலில் திமுக கூட்டணி பெற்றிருந்த வாக்கு சதவீதத்தில் 1989 தேர்தலில் அந்த அணியில் எந்த மாற்றமும் இல்லாத நிலையில், 1984ல் அதிமுக கூட்டணி பெற்ற வாக்குகள் அனைத்தும் 1989ம் ஆண்டு தேர்தலில் மூன்றாக சிதறியதாலேயே ஆட்சியை திமுக கைப்பற்றியது என்ற உண்மையை அதிமுகவின் இரு அணியினரும் உணரத் தொடங்கினர். இதனால், கட்சியை மீண்டும் இணைக்கும் முயற்சிகள் ஆரம்பமானது.
அதற்கு முந்தைய 1984ம் ஆண்டு தேர்தலில் திமுக கூட்டணி பெற்றிருந்த வாக்கு சதவீதத்தில் 1989 தேர்தலில் அந்த அணியில் எந்த மாற்றமும் இல்லாத நிலையில், 1984ல் அதிமுக கூட்டணி பெற்ற வாக்குகள் அனைத்தும் 1989ம் ஆண்டு தேர்தலில் மூன்றாக சிதறியதாலேயே ஆட்சியை திமுக கைப்பற்றியது என்ற உண்மையை அதிமுகவின் இரு அணியினரும் உணரத் தொடங்கினர். இதனால், கட்சியை மீண்டும் இணைக்கும் முயற்சிகள் ஆரம்பமானது.
தேர்தல் முடிந்த சில வாரங்களிலேயே ஜெயலலிதாவும், ஜானகி
அம்மாளும் சந்தித்தனர். முன்னதாக சென்னையில் தேவகி அம்மாள் மருத்துவமனையில் வைத்து
நலம் விசாரிக்கும் விதமாக சந்திப்பு நிகழ்ந்தது. இரு அணிகளும் முறைப்படி
இணைந்ததும் இரட்டை இலை சின்னமும் மீண்டும் பெறப்பட்டது. இந்த இணைப்பை பிடிக்காத
சிலர் வெளியேறினர் அல்லது தனிக்கட்சி தொடங்கினர். பி.எச்.பாண்டியன் இணையவில்லை.
எம்ஜிஆர் மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சியை நடிகர் பாக்யராஜ் தொடங்கினார்.
இதற்கிடையே, பொதுத் தேர்தலின்போது வாக்குப்பதிவு தள்ளி
வைக்கப்பட்டு இருந்த மதுரை கிழக்கு, மருங்காபுரி ஆகிய தொகுதிகளுக்கு நடந்த
இடைத்தேர்தலில் ஒன்றுபட்ட அதிமுக களமிறங்கி இரண்டு தொகுதிகளையுமே கைப்பற்றியது. மீண்டும்
அதிமுக தலையெடுக்க தொடங்கிய சமயத்தில், போயஸ் தோட்டத்தில் உள்ள ஜெயலலிதா
வீட்டுக்குள் போலீஸார் நுழைந்து, அவர் எழுதியதாக கூறப்பட்ட ராஜினாமா கடிதம் ஒன்றை
கைப்பற்றினர். எதிர்க்கட்சி தலைவர் வீட்டுக்குள் அத்துமீறி போலீஸார் நுழைந்த
சம்பவத்தை தொடர்ந்து முதல்வர் கருணாநிதிக்கு எதிராக கடும் கண்டனக் குரல் எழுந்தது.
அத்துமீறி வீட்டுக்குள் நுழைவது கிரிமினல் குற்றம் என கூறப்பட்டது.
தமிழக சட்டப்பேரவையிலும் இந்த சம்பவம் எதிரொலித்தது. நிதித்
துறை பொறுப்பு வகித்த முதல்வர் கருணாநிதி, 1989ம் ஆண்டு மார்ச் 25ம் தேதி அன்று
பட்ஜெட் தாக்கல் செய்ய எழுந்தார். அதன் பிறகு, சட்டப்பேரவையின் நிலவரம் கலவரமானது.
1988 ஜனவரி 28 போலவே மீண்டும் ஒரு கருப்பு தினம் உருவானது.
(நினைவுகள் சுழலும்)
No comments:
Post a Comment