வாஜ்பாய் பிறந்த நாள் கவிதை (25-12-2011)
=============================
தலைவர்களில் தனிப்பெரும் தலைவா,
அருமைமிகு கலாமுடன் அன்பு கரம் கோர்த்து
அணுகுண்டு சோதித்தாய்,
இந்தியாவின் பெருமை உயர்ந்தது
வல்லரசுகளின் எதிர்ப்பும் வலுத்தது. - அந்த
எதிர்ப்புகளையும் பொருளாதார தடைகளையும்
துணிவுடன் தகர்த்தெறிந்த தலைவா,
அன்னிய சிட்டுக் குருவிக்கும்
அஞ்சி நடுங்கும் ஆட்சியாளர்களையும்
அசையா உறுதியுடன் நின்ற உமது ஆட்சியையும்
அண்ணலே, அசைபோட்டு பார்க்கிறோம்
நீ நடத்திய ஏழாண்டு
ஆட்சியில் எழுந்தது பாரதம்
ஏழு ஜென்மத்துக்கும்
மறக்குமோ மனம் அதை
அனைவரையும் அரவணைப்பதில்
அன்னையான வாழும் மகாத்மாவே - உமது
அவதார நாளில் வணங்குகிறோம் உம்மையே
உமக்காக வேண்டுகிறோம் இறையையே
= வை.ரவீந்திரன்
No comments:
Post a Comment